கோவை அருகே கேக்கிற்கு பணம் கேட்டதால் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள்! - சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாப்பிட்ட கேக்கிற்கு கடைக்காரர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 இளைஞர்கள், டீக்கடையில் இருந்த கண்ணாடி ஜார்களை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தகாமராஜ் என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவரது கடைக்கு 5 இளைஞர்கள் தேநீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது, அவர்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக்குகளை சாப்பிட்டுள்ளனர். பின்னர், தேநீர் மற்றும் கேக் ஆகியவற்றுக்கு பணம் கொடுக்குமாறு காமராஜ், அந்த இளைஞர்களிடம் கேட்டுள்ளார்.



அதற்கு அவர்கள், கேக் கெட்டுவிட்டதாகவும், அதற்கு பணம் கொடுக்க முடியாது எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அங்கு திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜார்களை தூக்கிப்போட்டு உடைத்து சேதப்படுத்தினார்.



மேலும், டீக்கடைக்காரரை அவர்கள் தாக்க முயன்றபோது, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இளைஞர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காமராஜ், தமது கடையில் இதுபோன்று நடந்துகொள்வது 2வது முறை என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், டீக்கடையைத் தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...