புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணிகள் - தாராபுரம் நகராட்சித் தலைவர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார். 18 வது வார்டில் சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.


திருப்பூர்: தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் டீ கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஏராளமான குப்பைகள் தினம் தோறும் விழுகின்றன.

அத்துடன் புதிய பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் பயன்படுத்தும் குளிர்பானங்கள் மற்றும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.



இந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தாராபுரம் 18 வது வார்டில் அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின்போது, திமுக நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு, உதவி பொறியாளர் காளீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகரவை தலைவர் கதிரவன், கவுன்சிலர் செல்லின் பிலோமீனா ஜான்பால், வார்டு செயலாளர் ஜெரால்டு, நகர மாணவரணி துணை அமைப்பாளர் தில்லை முத்து, குடிநீர் மேற்பார்வையாளர் சுப்பிரமணி, துப்புரவு அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...