பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் நகைக் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வேலுச்சாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்வேலுச்சாமி (வயது82). இன்று அதிகாலையில் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பெரிய நாயகிஇருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வேலுச்சாமி, எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடினர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வேலுச்சாமி அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...