சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த மிலிட்டரி காலனி பகுதியில் சிலிண்டர் உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்ந்தது.



இதனிடையே சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும் திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினருடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும், கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...