கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்த பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சிவாவை துரத்தி பிடித்த பெண் காவலர் இந்துமதியை, மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டி, ரூ.5,000 வெகுமதி வழங்கியுள்ளார்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்து கைது செய்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது முதல் கணவரான சிவா ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பிச் சென்றார்.

இந்நிலையில், சிவா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி வெளியே ஓடியபோது அங்கு வேறு வழக்கு விசாரணைக்காக வந்த ஆனைமலை பெண் காவலர் இந்துமதி, சிவாவை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சிவாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தைரியமாக குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.5,000 வெகுமதி அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...