தாராபுரத்தில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி!

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்மபிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியானது தாராபுரம் நகரின் முக்கிய வீதிகளாக 5 சாலை சந்திப்பு, வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.

இதில் நீதிபதிகள்,தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, கூடுதல் கண்காணிப்பாளர் தனராசு, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...