ராகுல் காந்தி மீது பொய் வழக்கு - மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.



திருப்பூர்: ராகுல் காந்தி மீதான வழக்கை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ், ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு தொடுத்து சிறை தண்டனை வழங்கியதை கண்டிக்கும் விதமாக, திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டதில் மத்திய அரசின் பொய் வழக்கை கண்டித்தும், இந்த பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...