உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

உடுமலை அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதாக கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பிடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் இன்று விளைநிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு சாய்த்து யானைகள் சேதப்படுத்தி உள்ளது.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களாக இருப்பதால் வனத்துறையினரிடம் பலமுறை யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் இன்று தோட்டத்தில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உடனே போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் ஜஸ்வந்த்கண்ணனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...