பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்திய ஒடிசா பெண் கைது!

பல்லடம் அருகே சின்னக்கரையில் வேலை கேட்பது போல் நடித்து வட மாநில வாலிபரை கடத்தி 40 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வடமாநில பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே வேலை கேட்பது போன்று நடித்து ரூ.40 ஆயிரம் பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பஜுலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வடமாநில பெண் ஒருவர், வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், வேலை இருந்தால் தெரிவிக்குமாறும், பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறியதை அடுத்து, அந்த பெண், ஷாஜி மண்டலை சின்னக்கரை பேருந்து நிலையம் அருகே வரச் சொல்லியுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம ஆசாமிகள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.

மேலும் 40 ஆயிரம் ரூபாய் பணம், பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.



இது குறித்து ஷாஜி மண்டல் பல்லடம் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லாவை கைது செய்து, விசாரணை செய்தபோது அந்த பெண்ணும், அவருடன் வந்த நான்கு பேரும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...