கோவையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் - 3 மணி நேரத்தில் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

அன்னூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த, அன்னூர் காவல்நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: அன்னூரில் விபத்தை ஏற்படுத்திய விட்டு சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்றது.

இந்த வாகனத்தை 3 மணி நேரத்தில் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இவர்களின் செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் வரவழைத்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...