பல்லடம் அருகே சடலமாக இளம்பெண் மீட்பு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் தர்ஷினி என்ற பெண்(17) நேற்றிரவு தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வரதட்சணை கொடுமை செய்து தர்ஷினியை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



கோவை: பல்லடம் அருகே மஞ்சநாயக்கனூர் கிராமத்தில், தூக்கில் தொங்கியப்பட்டி இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அறிவொளி நகரில் வசித்து வரும் ராஜ் மற்றும் சவுதாமணி ஆகியோரின் மகள் தர்ஷினி. தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் சௌதாமணி மது போதைக்கு அடிமையானதால் தர்ஷினி தனது தாய் மாமன் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.



11ஆம் வகுப்பு படித்து வந்த தர்ஷனியை, 16 வயதிலேயே அவரது தாய் கட்டாயப்படுத்தி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே பல்லடம் அருகே மஞ்சப்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், குமார் வீட்டார் தர்ஷினியை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 6 மணியளவில் தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய்க்கு தர்ஷினியின் கணவர் குமார் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

குமார் வீட்டாரே போலீசாருக்கு தகவல் அளிக்காமல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தர்ஷினியின் உடலை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.



தகவலறிந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்த தர்ஷனியின் குடும்பத்தினர், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி தங்களது மகளை கொன்று விட்டதாக புகார் தெரிவித்தனர்.



சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தர்ஷினியின் குடும்பத்தாரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு தர்ஷனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தர்ஷினியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ள நிலையில் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...