உடுமலையில் சரக்கு வேன் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அன்பழகன் (40), வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் பலியானார்.


திருப்பூர்: பூலாங்கிணறு பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). விவசாயியான இவர் சொந்த வேலை காரணமாக உடுமலைக்கு வந்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.



பூலாங்கிணறு பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேனின் மீது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...