கோவையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து கோவை, தொண்டாமுத்தூர், ஆர்.எஸ்.புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி மீது திட்டமிட்டு பாஜக கட்சி அரசு மிரட்டுகின்ற பாணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றது. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, மற்றும் அரசு நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு மிரட்டல்களை நிறைவேற்றி வருகிறது.

பாஜக தன்னுடைய பொருளாதாரத் தோல்வி, அரசு நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக திசை திருப்பதற்காகவும் அதானி மீதும், பிரதமர் மீதும், எழுந்த குற்றச்சாட்டை மறைத்து மக்களுடைய கவனத்தை திசை திருப்பும் விதமாக இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.

உண்மையை, நேர்மையை, பேசுகின்ற ஒரே தலைவராக இன்றைக்கு ராகுல் காந்தி தேசத்தில் வலம் வருகிறார். அவரை கட்டுப்படுத்தி விட்டால் அல்லது மிரட்டி முடக்கி விட்டால், வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவோடு பாஜக சர்வாதிகார போக்கோடு செயல்படுகிறது.

சர்வாதிகாரத்தையும் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.



கூடவே பிரதமர் மோடி படத்தை தீயிட்டு எரித்தினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...