திருப்பூர் ரேஷன் கடையில் 2 மற்றும் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் இன்று முதல் துவக்கம்!

திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று முதல் 2 மற்றும் 5 கிலோ அளவிலான சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வரவேற்பை தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அரண்மனைபுதூர் அருகேயுள்ள ரேஷன் கடையில் இன்று முதல் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே திருப்பூர், சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அதேபோல் வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு ஒன்று என்ற நியாய விலை கடையில் இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது.



இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.



வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம்.

தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இந்த திட்டமானது இந்த கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் வரவேற்பை பொறுத்து விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் கூறப்படுகிறது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...