கோவை பூலுவபட்டி நகைக்கடையில் கொள்ளை முயற்சி - ஒருவர் கைது, 4 பேர் தப்பி ஓட்டம்!

கோவை பூலுவபட்டி அருகே உரக்கடையின் சுவரில் துளையிட்டு, அருகிலுள்ள தனியார் நகைக்கடையில் திருட முயன்ற கும்பலை ரோந்து போலீசார் விரட்டியதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மட்டும் பிடிபட்டார். தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை பூலுவபட்டி சின்னதம்பி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது47). இவர் பூலுவபட்டி கடை வீதியில் “எவர்கிரீன் அக்ரி கிளினிக் ஷாப்” என்ற பெயரில் விவசாய பூச்சி மருந்து, உரம் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் அவரது நண்பரை அழைத்துக் கொண்டு நள்ளிரவு 2 மணியளவில் கடை வழியாக பூலுவபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக ஒலி எழுப்பியவாறு போலீசாரின் ரோந்து வாகனம் வேகமாக சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

இதையடுத்து, அவரது கடைக்குச் சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்துள்ளது. அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மாயமானதும், அருகே உள்ள தனியார் நகைக் கடைக்கு உள்ளே செல்ல கொள்ளைக்கும்பல் துளையிட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் நகை கடை உரிமையாளர் மற்றும் ஆலாந்துறை போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், பால்பாண்டி வருவதற்கு முன்பாகவே அப்பகுதியில் ஆலாந்துறை போலீசார் வழக்கமாக ரோந்து சென்றபோது, போலீசார் வரும் சத்தம் கேட்டு மருந்து கடைக்குள் திருட வந்தவர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை கீழே வீசிவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றதில் ஒருவரை மட்டும் பிடிபட்டுள்ளார். பின்னர், கடை அருகே அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து விவசாய மருந்து கடையில் இருந்து துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த கடப்பாறை, சுத்தியல், உள்ளிட்ட ஆயுதங்கள் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...