கோவையில் செருப்புக் குடோனில் பயங்கர தீவிபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு!

கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் திவாக் பிரசாத் பாரிக் என்பவரின் செருப்பு கடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.


கோவை: கோவை ஆர்.எஸ். புரத்தை சேர்ந்தவர் திவாக் பிரசாத் பாரிக். இவர் கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் சொந்தமாக விளையாட்டு வீரர்களுக்கான ஷூ மற்றும் உபகரணங்கள், செருப்பு கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு தரைத்தளத்தில் உள்ள குடோனில் இவர் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்றிரவு இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு குடோனில் படுக்க சென்றார். அப்போது குடோனிலிருந்து புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், குடோனை விட்டு வெளியேறினார்.



அப்போது, குடோனில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.



அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஒரு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீ கட்டுக்கடங்காமல் குடோனில் இருந்து செருப்பு கடைக்கும் பரவியது. இதனால் 3 மாடி கொண்ட கட்டிடம் முழுவதும் தீ பயங்கரமாக எரிந்தது. அதே கட்டிடத்தில் இருந்த கோல்டு கம்பெனி மற்றும் பைனான்ஸ் நிறுவனத்திலும் தீ பற்றியது.

இதனால் அங்கு கூடுதலாக மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மேலும் அங்கு தண்ணீர் பீரங்கி வாகனம் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...