ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை தீர்ப்பு - பொள்ளாச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

அவதூறு வழக்கில் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எல்லா திருடர்களும் ஏன் மோடி என பெயர் வைத்துள்ளனர் என ராகுல்காந்தி பேசினார். மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து ராகுல் காந்திமீது, மோடி அரசு திட்டமிட்டு பொய் வழக்குகளை பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...