நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம் - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம், நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85.


தமிழ் திரையுலகில் 'தல' என ரசிகளால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்குமார் அண்மையில் நடித்து வெளியான, ‘துணிவு’ படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், அவரது தந்தையால் சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மணி என்கிற சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 85. மறைந்த சுப்பிரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அஜித்குமாருடன் அனில் குமார், அனூப் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

அஜித்குமாரின் தந்தையார் மறைவு செய்த கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல்கள் குவிந்துவருகின்றன. இதேபோல் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தமிழ் திரையுலகினர் பலரும் தந்தையார் மறைவுக்காக அஜித்திடம் இரங்கல் தெரிவித்துவருகீன்றனர். மறைந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

தந்தையின் மரணம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்வாக நாங்கள் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...