நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ் திரையுலக முன்னணி நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


சென்னை: தமிழ் திரையுலக முன்னணி நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் மறைவை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், " அஜித்குமாரின் தந்தை உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்.

மநீம தலைவர் கமல் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “தம்பி அஜித்குமாரின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...