டிவிஎஸ் வீகோ வாகனம் இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது தனது டிவிஎஸ் வீகோ வகை இருசக்கர வாகனத்தை இரண்டு புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி-கிரே ஆகிய வண்ணங்களில் அந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வீகோ வாகனமானது பிஎஸ்4 தரநிர்ணய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 110 சிசி திறன் கொண்டு, சிவிடிஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சினை கொண்டுள்ளது.

மேலும், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வரோ பேனல்கள், யுஎஸ்பி சார்ஜர் வசதி ஆகிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வீகோ வாகனங்கள் கோவையில் சில குறிப்பிட்ட வாகன விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு துணை அதிபர் அனிருத்தா ஹால்டர் கூறுகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் தரத்தின் மீதான கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது 2016 ஆம் ஆண்டின் ஜேடி பவர் குவாலிட்டி சர்வே ஆப் இந்தியா என்னும் விருதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பெற்றுள்ளது. இதுவே பயனாளிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் ஆகும். 

வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இயங்கும் எங்கள் நிறுவனம் இப்புதிய வாகன அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் இத்தருனத்தை கொண்டாடுகிறோம். 

இப்புதிய வீகோ வாகனத்தில் சின்க் பிரேக்கிங் வசதி, முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வர் ஓக் மரத்திலான பேனல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வாகனம் இளைஞர்களிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...