பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற உறுப்பினர்!

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ரத்து செய்யாத தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 வார்டு கவுன்சிலர்களில், ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்ட அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்லடம் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினாலும், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...