கோவையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் நடந்தது. வார்டுகளில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சூயஸ் குடிநீர் திட்டப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெறவில்லை என கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.


கோவை: கோவையில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மண்டல தலைவர் மீனாலோகு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம் மண்டல தலைவர் மீனாலோகு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சூயஸ் குடிநீர் திட்டப்பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினர்.

இக்கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசுகையில், மத்திய மண்டலத்தில் உள்ள 20 வார்டுகளில் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும்.

தற்போது குடிநீர் வினியோகம் செய்ய 15 நாள், 20 நாள் ஆகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனது வீட்டுக்கு குடிநீர் வந்து 18 நாட்கள் ஆகிறது. வடக்கு மண்டலம் 19-வது வார்டில் வாரம் ஒரு முறை குடிநீர் வருகிறது.

அங்கு வரும் போது, மற்ற வார்டுகளில் ஏன் வினியோகம் செய்ய முடியவில்லை. இது மிகவும் கவலை தரும் விஷயமாக உள்ளது, என்றார்.

இக்கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன், உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...