மேட்டுப்பாளையத்தில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!

மேட்டுப்பாளையம் அருகே எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எம் நகர் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.

இந்த சாலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சாந்திவனம் உள்ளது. இதனால் தினமும் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர மற்ற வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையானது பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருப்பதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

3 நாட்களுக்கு ஒருமுறை மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ, கார் மற்றும் அரசு பேருந்துகள் சாலையில் உள்ள குழிகளில் விழுந்து சிக்கி அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.



இதனிடையே சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்திலிருந்து வனபத்திர காளியம்மன் கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று எஸ்.எம்.நகரில் உள்ள சாலை பள்ளத்தில் சிக்கியது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சாலை மிகவும் மோசமாக உள்ள தால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...