தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மூன்றாண்டுகளாக இழப்பீடு வழங்காததால் பாதிக்கப்பட்ட உயர்மின் கோபுர விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பவர் கிரேட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் உயர்மின் கோபுரம் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலை இழப்பீடு பயிர்கள் மற்றும் தென்னை மரங்களுக்கான இழப்பீட்டை வழங்க வலியுறுத்தி இன்று தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.



இந்நிலையில் தாராபுரம் சார் ஆட்சியர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதுகுறித்து உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார் ஆட்சியரிடம், கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என தெரிவித்தனர். அதன் பின்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், 24 மணி நேரத்தில் உடனடியாக அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என தெரிவித்தார். இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மேலும், நல்லதங்காள் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.



இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் கூறுகையில், உயிர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்திற்கான இழப்பீடு, பயிர்களுக்கான இழப்பீடு இன்னும் ஒரு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படாமலே உள்ளது. மொத்தம் 1800 சர்வே நம்பர் 980 வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டும் மூன்று ஆண்டுகளாக பலமுறை மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், அரசு மெத்தனமாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். போராட்டத்தையொட்டி வருவாய் கோட்டாட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையில், விவசாயிகளுக்கு உடனடியாக காங்கேயம் தாராபுரம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என 24 மணி நேரத்தில் வழங்குவதற்கு ஆவணம் செய்வேன் என தெரிவித்தார்.

இன்னும் இழப்பீடு நிர்ணயம் செய்யாத விவசாயிகளுக்கு உடனடியாக நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேபோன்று நல்லதங்காள் அணை 750 ஏக்கர் நிலம் கொடுத்து இருபது வருடங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு கொடுக்கவில்லை தீர்ப்பு வந்து ஆறு வருடம் கழித்தும் இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...