பல்லடத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் சுமார் 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைகளை கோர்த்தபடி சாலையோரமாக மழையில் நனைந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசவம்பாளையம் சாலை வரை கையில் பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...