தாராபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி சிலை முதல் பேருந்து நிலையம் வரை ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி சிலை முதல் பேருந்து நிலையம் வரை ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.



இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...