ராகுல்காந்தி 2 ஆண்டு சிறை - வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு, சிறை தண்டனை தீர்ப்பை கண்டித்து, வால்பாறையில் பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று பேசியிருந்தார். மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இதை கண்டித்து, இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்பி அமீர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...