கோவை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

கோவை மாவட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து உப்பிலிப்பாளையம் சிக்னல் வரை வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், முடக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமான முறைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஜெகநாதன், பாலசுப்பிரமணியன், ஆனந்த், அரசு, கலைவாணன், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...