கோவைப்புதூர் அருகே பைக் மின்கம்பம் மீது மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவிஷ் (23), கோவை பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாவிஷ் உயிரிழந்தார்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் தக்கார் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன் பாவிஷ் (23). இவர் பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் பாவிஷ் கோவைப்புதூரில் தனியாக அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹரிகரன் என்ற மாணவருடன் பாவிஸ் பைக்கில் சென்று விட்டு, மீண்டும் அறைக்குத் திரும்ப பைக்கில் வந்துள்ளனர். அப்போது ஹரிகரன் பைக்கை ஓட்டியுள்ளார். புட்டு விக்கி சாலையிலிருந்து கோவைப்புதூர் நோக்கி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பாவிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாவிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...