கோவையில் அயர்னிங் கடையில் பாய்லர் வெடித்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் வணிக வளாக மாடியில் ஸ்டீமிங் முறையில் துணிகளை அயர்ன் செய்யும் கடையில் பாய்லர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே மகாதேவ் எலக்ட்ரிக்கல் என்ற கடை அமைந்துள்ள மாடியில் ஸ்டீமிங் முறையில் துணியில் அயர்ன் செய்து கொடுக்கும் கடை இயங்கி வருகிறது.



இந்த கடையில் ஸ்டீமிங் செய்வதற்காக வைத்திருந்த பாய்லர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மளமளவென பரவிய தீ குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



அதற்குள் உள்ளே இருந்த துணிகள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.



திருச்சி பிரதான சாலையோரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...