ஈஷா யோக மையத்தில் பிரதமர் பயணம் செய்ய உள்ள விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகை நடத்தப்பட்டது.


கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரத்திலான ஆதியோகி சிலை திறப்பு விழா மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 24ம் தேதி கோவை வர உள்ளார். இதனை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகையும் நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் உலகிலேயே மிக உயரமான சுமார் 112 அடியில் ஆதியோகியான சிவபெருமானின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவானது வருகிற 24ம் தேதி மகா சிவாராத்திரியன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்று சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வர உள்ளார். அவருடன் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் அன்றைய தினம் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர். 

இதனையடுத்து ஈஷா யோக மையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மத்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஈஷா மையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி உச்சகட்ட பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி,கோவை சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்ய பாரதி உள்ளிட்டோர் ஈஷா யோக மையம் மற்றும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் மைதானம்,வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 

அதேபோல் இந்திய விமானப்படை வீர்ர்கள் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு, விமானப்படை அதிகாரிகள், தேசிய சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பிரதமர் பயணம் செய்ய உள்ள விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகையும் நடத்தப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...