ஆஸ்கர் தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் தர்மபுரி குட்டியானை - வைரல் வீடியோ!

தர்மபுரியில் கிணற்றில் இருந்து இருந்து மீட்கப்பட்ட நான்கு மாத குட்டியானையை, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதியான பொம்மன் - பெள்ளி இருவரும் பராமரித்து வருகின்றனர். குட்டியானையோடு தம்பதி கொஞ்சி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



நீலகிரி: தர்மபுரியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர், அந்த குட்டி யானையை மீட்டனர்.

பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில், தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 17ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு வந்தனர். இந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகிய இருவரும் பராமரிக்க அரசு உத்தரவிட்டது.



அதன்படி ஒப்படைக்கப்பட்ட அந்த குட்டி யானை ஆஸ்கார் விருது தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...