கோவையில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ மேற்கு, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு. பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட குறிச்சி, ஹவுசிங்யூனிட்‌ பேஸ்‌-1 பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌,



நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புண்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்‌ பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடாந்து, குறிச்சி, ஹவுசிங்யூனிட்‌ பேஸ்‌-1 பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆழியார்‌ குடிநா்‌ நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு மீட்டா பொருத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, மேற்கு மண்டலம்‌ தடாகம்‌ பிரதான சாலையில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ நடைபெற்றுவரும்‌ குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு,



மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.42-க்குட்பட்ட கோவில்மேடூ, சாவித்திரி வீதியில்‌ ரூ.28 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ நகர்‌நல மையம்‌ கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.44க்குட்பட்ட சாய்பாபாகாலனி, இரத்தினசபாபதி சாலை, கோ-ஆப்ரேட்டிவ்‌ காலனி சாலை ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ ரூ.53.61 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 635 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்றுவரும்‌ தார்‌ச்சாலைப்‌ பணிகளையும்‌, வார்டு எண்‌.45ல்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டம்‌ பேஸ்‌-1 (TURIP 2022-2023) கீழ்‌ மணியன்வேலப்பர்‌ வீதி- குப்பகோனம்புதூர்‌ வரை 40.66 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 417 மீட்டா்‌ தொலைவிற்கும்‌, மருதுகுட்டி வீதியில்‌ ரூ.18.82 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 300 மீட்டா தொலைவிற்கும்‌ நடைபெற்றுவரும்‌ தார்‌ச்சாலைப்‌ பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.45க்குட்பட்ட மணியன் வேலப்பா வீதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர்‌ வடிகால்‌ தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண் 45க்குட்பட்ட குப்பகோனாம்புதூர்‌ பகுதியில்‌ உள்ள நல்வாழ்வு மையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, சிகிச்சை முறைகள்‌, மருந்து மாத்திரைகளின்‌ இருப்புகள்‌ மற்றும்‌ பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. பின்னர்‌, அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை நில்‌ அளவை செய்து அகற்றிட சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ பிரபு நகரில்‌ SBM திட்டத்தின்கீழ்‌ ரூ.27.04 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சமுதாய கழிப்பிடம்‌ கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை நில அளவை செய்து பணியை விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

பின்னர்‌, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்குட்பட்ட ஜீவா நகரில்‌ ரூ.5.2 கோடி மதிப்பீட்டில்‌ 1600 மீட்டட்‌ தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல்‌ மற்றும்‌ சிறுபாலங்கள்‌, ரூ.1.8 கோடி மதிப்பீட்டில்‌ 920 மீட்ட தொலைவிற்கு தார்‌ சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.66க்குட்பட்ட டாடாபாத்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளா்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின்போது, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, ஆளுங்கட்சித்‌ தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ பிரவீன்ராஜ்‌, காயத்திரி, பேபிசுதா, கமலாவதிபோஸ்‌, கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை (தெற்கு), உதவி ஆணையாளர்‌ சேகர்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்)‌, உதவி செயற்பொறியாளாகள்‌ கருப்பசாமி, ஷஹோமலதா, புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலா்‌ ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ஆண்டியப்பன்‌, குணசேகரன்‌, உதவி பொறியாளா்கள்‌ சபரிராஜ்‌, எழில்‌, ஹரிபிரசாத்‌, கணேசன்‌, விமல்ராஜ்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ சந்திரசேகார்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...