திருப்பூர் 49வது சர்வதேச நிட் ஃபேர் கண்காட்சி - ரூ.400 கோடிக்கு வணிக விசாரணை நடைபெற்றதாக தகவல்!

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியில் கோடை , குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.



திருப்பூர்: இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச அளவில் புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில் திருப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் 49வது சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சியானது, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் மார்ச் 22-ந் தேதி துவங்கி 24 ந் தேதி வரை நடைபெற்றது.



இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கோடை, குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள், கண்காட்சியில் பங்கேற்ற பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் கண்காட்சியில் கலந்து கொண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.



இந்தக் கண்காட்சியில், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனத்தினர் நூற்றுக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்தி உள்ளதாகவும், ரூ.200 கோடிக்கு உடனடி வணிகம் உருவாக்கப்பட்டதோடு, 400 கோடிக்கான வணிக விசாரணை நடைபெற்றதாகவும், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பருத்தி ஆடைகளைத் தவிர மற்ற ஏற்றுமதி ஆர்டரை ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...