உடுமலை அருகே ஆட்சியர் வாகனத்தை மறித்து தகராறு - 8 பேருக்கு தலா 13 மாதங்கள் சிறை!

கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலை அருகே மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 8 பேருக்கு தலா 13 மாதம் சிறை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து உடூமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 2016ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்ட 8 பேருக்கு தலா 13மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உடுமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உடுமலை அடுத்த பெரியபாப்பனூத்து பகுதியில் கடந்த 13.07.2016 அன்று மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

முகாம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது வாளவாடியைச் சேர்ந்த செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், வேலூரைச் சேர்ந்த அருள்பிரகாஷ், பூலாங்கிணரைச் சேர்ந்த விஜயசேகரன், சின்ன பாப்பனூத்தைச் சேர்ந்த சபாபதி, தங்கவேல், சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாப்பனூத்து கிராம நிர்வாக அதிகாரி பால்வாசகம் தளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இவர்கள் மீதான வழக்கு உடுமலை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு 2வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு மீனாட்சி விசாரித்து வந்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமார், விஜயசேகரன், சந்திரசேகரன், அருள்பிரகாஷ், விஜயசேகரன், சபாபதி, தங்கவேல், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் ஒரு மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...