ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கியதை கண்டித்து துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: ராகுல் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டதை கண்டித்து கோவை மாவட்டம் துடியலூர் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் பாஜகவினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அகில இந்திய காங்கிரஸ் கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் ஆலோசனை படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி.மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, துடியலூர் சர்கிள் தலைவர் சுரேந்திர பாபு, கவுண்டம்பாளையம் சர்கிள் தலைவர் நாகராஜ், எஸ்.எஸ்.குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு துணை புரிந்ததாக பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பபினர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி தொகுதி தலைவர் சூர்யபிரகாஷ், பார்த்திபன், சதீஷ்குமார், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், ஜனார்த்தன நாயுடு, அசோகன், தம்பி பார்த்திபன், பழனிச்சாமி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...