உடுமலை வழியாக இயக்கும் விரைவு ரயில்களின் சோதனை ஓட்டம் குறித்து முறையாக அறிவிக்க கோரிக்கை!

உடுமலை வழியாக சோதனை ஓட்டத்தில் இயக்கப்படும் ரயிலானது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் சோதனை ஓட்டம் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக இயக்கப்படும் ரயில்களின் சோதனை ஓட்டம் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் - பாலக்காடு இடையிலான ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ரயில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.



ஆனால் இதுகுறித்து முன் அறிவிப்பு எதையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடவில்லை. இதனால் விபத்து நேரிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, பாதுகாப்பாகவும் விரைவாகவும் பயணம் மேற்கொள்ளும் வகையில் ரயில்களுக்கென தனி வழி (தண்டவாளங்கள்) அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அபாயகரமான முறையில் தண்டவாளங்களை கடப்பது, தண்டவாளங்களில் நின்று ரயிலுடன் செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துதல் உள்ளிட்ட விதி மீறல்களால் பல விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

எனவே விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபடுகிறது. ஆனால் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஏற்படும் விபத்துக்களுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுகிறது.

முக்கியமாக ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, புதிய வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவது, ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட நேரங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் சோதனை ஓட்டங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களை எச்சரிப்பது வழக்கமாகும். சோதனை ஓட்டம் ஆனால் சமீப காலங்களாக இந்த நடைமுறை சரிவர பின்பற்றப்படுவதில்லை.

இதனால் வழக்கமான நேரம் தவிர்த்து எதிர்பாராமல் வரும் ரயிலால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் -பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் சோதனை ஓட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 22-ந் தேதி என மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஆனால் 21-ந் தேதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதுபோல முறையான அறிவிப்பு இல்லாமல் ஆய்வு ரயில் இயக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் தேனி அருகே 2 பேர் பலியான சம்பவமும் நடைபெற்றுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் சோதனை ஓட்டம், ஆய்வு ரெயில் போன்றவை இயக்கப்படுவது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...