உடுமலையில் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்!

உடுமலை - பழனி சாலையில் உள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற வட்ட சட்டபணிகள் குழு சார்பிலான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி, உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உடுமலை - பழனி சாலையில் அமைந்துள்ள சன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட கருத்துரைகளை வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, மகாலட்சுமி, தம்பி பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.



இதில், கேர் டி நிறுவன ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் மக்களமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், கேர் டி நிறுவனத்தின் பஞ்சாலை பயிற்சியாளர் லீனா ஜஸ்டின், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் முதியோர் உதவி எண்ணின் மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் மைதிலி, சார்க்.டிரஸ்ட் தலைவர் சாமிநாதன் துரை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஆணைய பணியாளர்கள் மற்றும் தீபம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...