தாராபுரம் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்!

தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையின் 2 ஓரங்களிலும் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் சாலையோரங்களில் முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாராபுரம் நகரின் மையப் பகுதியான பூக்கடை கார்னர் பகுதியில் இருந்து உடுமலை ரோடு, கரூர் ரோடு, ஜவுளி கடை வீதி, வசந்த ரோடு ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் எந்த பக்கம் பார்த்தாலும் சாலையின் இரண்டு ஓரங்களிலும் முறையற்ற முறையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சில வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்களுக்குள் தனது வேலை நிமித்தமாக செல்கின்றனர்.



சாலை ஓரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் இரவு நேரங்களில் சாலையில் வாகனம் செல்வதற்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்துக்கள் ஏற்படவும் அதிக அளவில் வாய்ப்புள்ளது.



மேலும், அரசு டவுன் பூக்கடை கார்னரில் இருந்து உடுமலை ரோடு செல்லும் வரை அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள் செல்ல முடியாமல் தினந்தோறும் திணறிய வண்ணம் உள்ளது. இதே நிலை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

எனவே சாலையில் இரண்டு ஓரங்களிலும் முறையற்று நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை ஏதாவது சாலையில் ஒருபுறமாக நிறுத்தினால் வாகன நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...