கோவை மதுக்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலியான சோகம்!

மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹர்சாத்(23) காரில் தனது நண்பர்களுடன் பாலக்காடு புறப்பட்டு சென்ற போது, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பழுதான சீட் பெல்டை கீழே சரிசெய்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் மகன் முகமது ஹர்சாத் (23). தொழிற்கல்வி படிப்பை முடிந்த அவர் பணிக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் முகமது ஹர்சாத் தனது நண்பர்களான பிரவீன், கோகுல்ராஜ், மற்றும் உறவினர் உசேன் அப்துல் ரகுமான், ஆகியோருடன் பாலக்காடு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது பாலக்காடு நெடுஞ்சாலையில் சென்ற போது காரில் இருந்த சீட் பெல்ட் வேலை செய்யாததால், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்தி முகமது ஹர்சாத் சீட் பெல்ட்டை சரி செய்துள்ளார்.

இந்நிலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென ஹர்சாத் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை உடன் இருந்தவர்கள் மீட்டு குனியமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...