வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சோலையாறு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சின்னக்கல்லாறு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



அதன்படி, சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 3143 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 497 கன அடியாகவும் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு தற்போது 13.58 அடி உயரம் உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...