போக்குவரத்து விதிகளை கடைபிடித்தாலே விபத்துகளை தவிர்க்க முடியும் - கோவை மாநகர காவல் ஆணையர் வலியுறுத்தல்!

பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் நடைபெற்ற தலைக்காயம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தானை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துகளாலேயே ஏற்படுவதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் உலக அளவில் 10 முதல் 12 சதவீத மக்கள் தலையில் காயம் ஏற்படுவதால் இறப்பதாக கூறப்படுகிறது.



இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக தலைக்காயம் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற, வாக்கத்தானை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய இந்த வாக்கத்தான் பிரதான சாலை வழியாக நஞ்சப்பா சாலை ராயல்கேர் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த வாக்கத்தானில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்றபடி பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க இயலும்.

கோவை மாநகரை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் வகையில், பல்வேறு புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...