பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் மேன்மை தமிழ் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு கூப்பிடு‌ பிள்ளையார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலானது, 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு நன்னீராட்டு பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் வீரமாத்தி அம்மன் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தக்குடம், மற்றும் முளைப்பாரி எடுத்து முற்கால வேள்வி வழிபாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம் கால வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு எண் வகை மருந்து சாத்தி விமான கலசங்கள் நிறுவப்பட்டன.



இந்நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடும், பேரூர் ‌ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதி கருவரை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.



காரணம்பேட்டை, கோடங்கிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...