திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு - பெண் கைது!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒருவாரம் ஆன குழந்தையை கடத்திச் சென்ற இடுவாய் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண்ணை 12 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை 12 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருப்பூர் அடுத்த செரங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கோபி - சத்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவத்திற்கு பிறகு சத்யாவை வார்டுக்கு மாற்றி உள்ளனர்.



அப்போது 4 நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் லிப்டில் செல்லும் போது குழந்தைக்கு தாங்காது நான் படியில் எடுத்து வருகிறேன் என நைசாக பேசி குழந்தையை வாங்கி உள்ளார். வேறு தளத்திற்கு சென்ற சத்யா குழந்தையை பெண்மணி கொண்டு வராததால் மீண்டும் அதே இடத்திற்கு சென்றுள்ளார்.



அப்போது அந்த பெண் சத்யாவின் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக தெரிவித்து விட்டு தனது பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறி உள்ளார். ஆனால் குழந்தை மாமியாரிடமும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த சத்யா அலற துவங்கினார்.



இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தெற்கு உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.



கடந்த 4 நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித்திரிந்த பெண் திட்டமிட்டு குழந்தையை கடத்தி உள்ளாரா என சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்ததில் அவர் இடுவாய், வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள்(42) என்பது தெரியவந்தது.



வீட்டில் இருந்த அவரை உடனடியாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் தனக்கு குழந்தை இல்லாததால் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை திருடி செல்ல முயன்றது தெரியவந்தது.



இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த அவர், கேட்பவர்களிடம் தனக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என பொய்யாக தெரிவித்து வந்துள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் கடந்த 4 தினங்களாக சுற்றித்திரிந்துள்ளார்.

தொடர்ந்து சந்தர்ப்பம் அமைந்ததும் ஆண் குழந்தையை கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மீட்ட குழந்தையை தாயார் சத்யாவிடம் ஒப்படைத்தனர்.

கடத்தப்பட்ட 12 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...