ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப் - பரமக்குளம் இடையேயான சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் மற்றும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.



தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன.



இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கும் கேரளா வனப்பகுதியான ஆணைப்பாடி எல்லைப் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் வந்துள்ளது இதை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



மேலும் இந்த வீடியோவை கண்ட வனத்துறையினர் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலா பயணிகள் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...