கொங்கு மண்டலம் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது - அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உறுதி

கோவை புளியகுளம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தென் மண்டலம் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது, அங்கு அவருக்கு அதிகமான ஆதரவாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.



கோவை: கொங்கு மண்டலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக உள்ளது என அதிமுக ஓபிஎஸ் அணி கோவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் புளியகுளம் விநாயகர் கோவிலுக்கு ஜெயலலிதா வேடம் அணிந்த சிறுமியுடன் வந்து ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜை செய்தனர்.



அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் பகுதியில் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதிமுக (ஓபிஎஸ்) அணி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.



அதனைத் தொடர்ந்து பகுதி கழக அலுவலகம் திறக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் மோகன்ராஜ் பேசியதாவது, தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓபிஎஸ் யின், கோட்டையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.

இன்று நடந்த கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்துள்ளனர். ஓபிஎஸ் உத்தரவின் பேரில் தற்போது இந்த நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் குறித்து அவர் எங்களுக்கு தெரிவிப்பார்.

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு கோவையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஓபிஎஸ் வர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ் அணியினர் பேரணியின் போது ஜமாத்துகள் அடித்தும், நடனங்கள் ஆடியும் புளியகுளம் சாலையில் வலம் வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...