தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல் - பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மரங்களை இரவு நேரங்களில் வெட்டி கடத்திச் செல்லும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் கரையிலிருந்த மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலங்கியம் அருகே அமராவதி ஆற்றின் கரையோர பகுதியின் இரு புறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளிய மரம், சவுக்கு, தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரக்கன்றுகளை வனத்துறையினர் நட்டுப் பராமரித்து வந்தனர்.



இந்நிலையில் கூடுதுறை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை கடந்த 6 மாதமாக மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, அலங்கியம் அமராவதி ஆற்றுப்படுகையில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம ஆசாமிகள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனை வனத்துறை அதிகாரிகள் தடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி கூறியதாவது, மரங்கள் வெட்டப்பட்டது உண்மை தான். யார் வெட்டி செல்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. பொதுமக்கள் தரப்பில் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் வரை இருக்கும்.

இதுகுறித்து வனத்துறையினரின் அறிக்கை பெற்ற பின்னர், தான் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அவர்கள் கூறிய பிறகு தான் மரங்களை வெட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...