தாராபுரத்தில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.07கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1.07 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கயல்விழி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தம்பாளையம் கிராமங்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சீலநாயக்கன்பட்டியில் இருந்து தார்ச்சாலை அமைக்க ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிக்குப் பூமி பூஜை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குருவப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், தாராபுரம் வசந்தம் நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த பணிகளை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துணைத் தலைவர் சசிகுமார் திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...