குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

தாராபுரம் அடுத்த குண்டடம் சந்தையில், சனிக்கிழமை தோறும் ஆடு, கோழி விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகளவில் ஆடுகள் வரத்து காரணமாக விலை குறைந்து விற்பனையானதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


திருப்பூர்: குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.



இந்த சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர் பகுதிகளிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் வெயில் அதிகரிப்பால் காடுகளில் மேய்ச்சல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் பங்குனி உத்திரத்தையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை குறைவாக இருப்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.7ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விலைபோயுள்ளது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9ஆயிரத்துக்கு விற்பனையானது.

அதேபோல் கோழிகளையும் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.350 முதல் ரூ. 450 வரை விலைபோனது. இந்தவாரம் 1 கிலோ ரூ.500 முதல் ரூ.530 வரை விலைபோனது.

நல்ல வீரியத்துடன் சண்டையிடும் கருங்கால்பொன்றம், மயில், காகம் போன்ற நிறத்துடன் உள்ள சேவல்களை சண்டையிட்டுப் பார்த்து அதிக விலைக்கு வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...