ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்!

ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை விதித்ததையும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததையும் கண்டித்தும் கோவையில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியதைக் கண்டித்தும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான. எம்.என்.கந்தசாமி, முன்னாள் மேற்கு மன்ற தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...